200 பில்லியன் வரவு செலவு திட்டத்தில் இந்திய இளைஞர் ஒருவரின் அடிப்படைத் திறன் பயிற்சிக்கு 7.75காசு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி நாட்டின் வரவு செலவு திட்டத்தில் 230 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் 400,000 இந்திய இளைஞர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சித் திட்டங்களில் பங்கெடுக்க வெறும் 3 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு இந்தியருக்கு 7.75 காசு மட்டுமே போய்ச் சேரும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கே இந்த 3 மில்லியன் ரிங்கிட் செலவாகியிருக்கும்!
ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் மத்திய ஆய்வில் 2006 முதல் 2010 வரைக்கான ஒதுக்கீடு 230 பில்லியன் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் மலேசிய நாகரீக சமுதாயம் இதுவரை மலேசியாவில் மலாய், சீனர், பூர்வீகக் குடியினர், ஈபான் அல்லது கடாசான் மக்களுக்கு குரலெழுப்புவதை போன்று இந்தியர்களின் தீவிர பிரச்சினைகளை குரலெழுப்புவதில்லை.
50 ஆண்டுகளாக இன மற்றும் அரசியல் அடிப்படையிலேயே இந்நாட்டு பல்லின மக்களின் சமூகப் பிரச்சினைகளை குறித்து விவாதம் நடத்துவதை விடுத்து இந்தியர்களின் தீவிர பிரச்சினைகளை எதிர்கட்சிகள் தேவையின் அடிப்படையிலும் விவாதித்திருந்தார்களேயானால், இப்பிரச்சினைகளை களைய இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது. இந்தியர்களும் இன்று இந்த வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள்.
ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு வர்ண கால்சட்டையை அணிந்து பிரதமரைக் காணச் சென்றதும் அவருக்கு பெரிய நோன்பு பெருநாள் அட்டை, கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்களை கொடுத்து விட்டு, ஹிண்ட்ராப் வழக்கறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியது ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும் என்று கூறிய பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹஜி ஹடி அவாங்கின் அறிக்கை பாராட்டத்தக்கது.


