மக்கள் கூட்டணி இந்தியர்களை மதிக்காததால் 62.6% தெனாங் இந்திய வாக்காளர்கள் மாறினார்கள்.

 

 

 

2008 பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு வாக்களித்த லாடாங் லாபீஸ் தீபோர் தோட்டத்தில் வசிக்கும் 107 இந்திய வாக்களர்களின் எண்ணிக்கை தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் 40ஆக சரிவு கண்டது மட்டுமின்றி மக்கள் கூட்டணியிலிருந்து 62.6% இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியின் பக்கத் திரும்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று என  மனித உரிமைக் கட்சி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளரான பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்தார். மேலும் 8 மார்ச் 2008 பொதுத்தேர்தல் போன்றதொரு சூழ்நிலையைக் கொண்டுவரும் சக்தி ஹிண்ட்ராப்புக்கு மட்டும் தான் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடுதோறும் பரவலாக வசிக்கும் இந்திய வாக்காளர்கள், இந்தியர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு 222 நாடாளுமன்றம் மற்றும் 576 சட்டமன்றத் தொகுகளில் பெரும்பான்மை வாக்குகள் கொண்டிருக்காததைப் பயன்படுத்தி ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் பேரணியின் வேகத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியும், 8 மார்ச் 2008இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது.
மலேசிய வரலாற்றில் முதல் தடவையாக, தேசிய முன்னணி அதன் 2/3 பெரும்பான்மை பிளவுபட்டு மக்கள் கூட்டணி கூட்டரசுப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கைப்பற்றியது. ஆனால் அதன் பின்பு இந்திய வாக்காளர்களின் வாக்குகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு அவர்கள்  கைவிடப்பட்டனர்.
9/5/09 வரை ஹிண்ட்ராப் வழக்கறிஞர்கள் இசா சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் இடைவெளியில் நடைபெற்ற பெர்மாதாங் பாவோ 26/8/08, கோலத்திரங்கானு 17/1/09, புக்கிட் காந்தாங் 7/4/09 மற்றும் 7/4/09  புக்கிட் செலம்பாவ் இடைத்தேர்தல்களில் கணிக்கப்பட்ட 90% வரை இந்தியர்கள் வேறுவழியின்றி மக்கள் கூட்டணிக்கு   வாக்களித்தனர்.  (உத்துசான் மலேசியா 31/1/2011 பக்கம் 5)
அதன் பின்பு மக்கள் கூட்டணியின் தொடர் புறக்கணிப்பால் இந்திய வாக்காளர்களின்  62.6% வாக்குகள் தற்பொழுது தேசிய முன்னணியின் பக்கம் திரும்பியுள்ளதை நேற்று (30/1/2011) நடைபெற்ற தெனாங் இடைத்தேர்தல் தெளிவுப்படுத்துகிறது. இதற்கு முன்பு  19.0% மற்றும் 20.4% இந்திய வாக்காளர்கள் கொண்ட  உலுசிலாங்கூர், பாகான் பினாங் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
அதோடு மட்டுமின்றி இதற்குப் பிறகு நடைபெறவிருக்கும் மெர்லிமாவ் இடைத்தேர்தலிலும் இவ்வாறான முடிவுகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் கூட்டணி இந்தியர்களின் பிரச்சினைகளை புறக்கணித்து விட்டு அவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்றிருந்தால் எதிர்வரும் 2011/2012 பொதுத்தேர்தலிலும் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மக்கள் கூட்டணியைக் காட்டிலும் தேசிய முன்னணியின் 53 ஆண்டுக்கால ஆட்சியை முறியடிக்க எச்ஆர்பி தீவிரம் கொள்கிறது என்று அவர் கருத்து தெரிவித்தார். இன்று 70% மலேசிய ஏழை இந்தியர்கள் இந்நாட்டின் ‘கறுப்பினத்தவர்கள்’ போன்று நடத்தப்படுவதற்கு ஒரே காரணம் தேசிய முன்னணி என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.  
மேலும் நேற்று பினாங்கு, பிராயிலுள்ள, சாய் லெங் பார்க் சமூக மண்டபத்தில் நடைபெற்ற பினாங்கு மாநில ஹிண்ட்ராப் மாநாட்டில் கேள்விக்கு பதிலளிக்கையில், 9/5/09 முடிவடைந்த 514 நாட்கள் சிறைவாசத்தின் விடுதலைக்குப்பின் இன்றுவரை அன்வார் இப்ராஹிம், லிம் கிட் சியாங், ஹடி அவாங் அல்லது முதலமைச்சர்கள் டத்தோ ஸ்ரீ அஸிஸான், தான் ஸ்ரீ காலிட் மற்றும் லிம் குவான் எங், ஹிண்ட்ராப்பை அழைத்து குறிப்பாக மக்கள் கூட்டணி ஆளும் கெடா, பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் மட்டுமின்றி மக்கள் கூட்டணியின் எதிர்கட்சி தலைவர்கள் சார்பிலும் அவர்களின் 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பிலும் நாடுதோறுமுள்ள  ஏழை இந்தியர் பிரச்சினைகள் குறித்து இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். தேசிய முன்னணியிலுள்ளது போன்று ஹிண்ட்ராப்/எச்ஆர்பி மண்டோர்களாக மறுப்பதாலும் ஏழை இந்தியர்களின் பிரச்சினைகளை களைய தீவிரமாக ஈடுபட்டிருப்பதாலும் எதிர்கட்சியினர் ஹிண்ட்ராப்பை புறக்கணிக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பிகேஆர், டிஏபி மற்றும் பாஸ் தலைவர்களுக்கு எண்ணிலடங்கா கடிதங்கள் அனுப்பியும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணி அக்கடிதங்களை நிராகரித்ததைப் போன்றே இவர்களும் இதுவரை ஒரு பதில் கடிதமும் அனுப்பியதில்லை. ஆகவே இதில் மாற்றம் எங்கே உள்ளது என்று அவர் கேள்வியெழுப்பினார்.
ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு வேறு எந்த வழியும் இல்லாமல், ஹிண்ட்ராப் மற்றும் எச்ஆர்பி 2011/2012 பொதுத் தேர்தலில் எச்ஆர்பியின் 15/38 திட்டத்தின் மூலம் 15 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 38 சட்டமன்ற தொகுதிகளிலும் சுயேச்சையாக போட்டியிட உள்ளது.
ஆகவே எச்ஆர்பி தேசிய முன்னணியின் புத்ராஜெயா ஆட்சியைக் களைக்கும் நேருக்கு நேரான போட்டியில் எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் கூட்டணி இடையில் பாதகம் தராமல் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு வேளை மக்கள் கூட்டணி தொடர்ந்து இந்தியர்களை புறக்கணித்து, அவர்களின் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளைக் கையாளாமல் அவர்களின் வாக்குகள் மீது மட்டும் நாட்டம் கொண்டிருக்கும் குணத்தை மாற்றாவிடில், அடுத்தக்கட்டமாக இந்தியர்கள் தேசிய முன்னணிக்கோ அல்லது மக்கள் கூட்டணிக்கோ வாக்களிக்க மாட்டார்கள். காரணம் இதனால் ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எவ்வித மாற்றமும் இல்லை. காரணம் இதில் தேசிய முன்ணனி மற்றும் மக்கள் கூட்டணி இவ்விரண்டுமே ராவணனாவார்கள். உரிமை பரிவு அல்ல என்ற சுலோகத்தோடு பி.உதயகுமார் தனது அறிக்கையை முடித்துக் கொண்டார்.