Get Adobe Flash player
Sponsor a candidate for Hindraf & HRP Project 7/14 Focus Selangor @ 13th General elections expected in Mac 2013. Pathmarajah & Co. Chartered Accountants - Maybank Acct No. : 514075011112 - "You Must Be The Change You wish To See In The World" ~ Gandhi - Follow us on www.hindraf.org , Twitter - HINDRAF1 or Facebook Hindraf Support Group.

    DSC_0160

DSC_0028கடந்த 16/7/11 சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குளுவாங், சே லுவான் கோர், சீர்திருத்த அமைப்பு, பெர்சாதுவான் மெம்பாய்கி அக்லாக் மண்டபத்தில் எச்ஆர்பி மற்றும் ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்வில் ஏறக்குறைய 250 ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.

எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார் உரையாற்றுகையில் ஜொகூர் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் எச்ஆர்பி போட்டியிடும் என்று அறிவித்தார்.

பல்லின கட்சிகள் என்றுக் கூறிக்கொள்ளும் பிகேஆர், டிஏபி மற்றும் பாஸ் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஏழை இந்தியர்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றனர். ஆகவே இந்தியர் பெரும்பான்மை தொகுதியை உருவாக்குவதன் மூலமே இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் பெர்சே/மக்கள் கூட்டணியின் நியாயமான தேர்தல் முறை கோரிக்கையில் இவ்விவகாரம் உட்படுத்தப்படவில்லை. மக்கள் கூட்டணியின் உயர்மட்டத்தலைவர்கள், அக்கட்சியின் 11 இந்தியர்கள் உட்பட 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழை இந்தியர்களின் பிரச்சினைகளை ஓரங்கட்டாமல் அப்பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கியிருந்தால் இந்திய பெரும்பான்மை தொகுதிக்கான தேவை ஏற்பட்டிருக்காது.DSC_0126

வடை விற்கும் கடைக்கான உரிமத்தை ஒரு ஏழை இந்தியருக்குக் கூட இந்த தேசிய முன்னணி/ மக்கள் கூட்டணியிலுள்ள இந்திய மண்டோர்கள் தங்களின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து பெற்றுத் தர முடியவில்லை. அப்படியிருக்கையில் ஹிண்ட்ராப்பின் 18 அம்ச கோரிக்கைகளை அவர்கள் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்றும் அக்கூட்டத்தில் அவர் தனது உரையில் கேள்வியெழுப்பினார்.

DSC_0040இந்நாட்டில் ஒரு மில்லியன் இந்திய வாக்காளர்கள் இருந்தும்கூட (கடந்த 2008 பொதுத்தேர்தலின் கணக்கெடுப்பு 715,099) இந்நாட்டிலுள்ள 222 நாடாளுமன்ற மற்றும் 576 சட்டமன்ற தொகுதிகள் இருந்தும் இதுவரை ஒரு இந்திய பெரும்பான்மை தொகுதிகூட இல்லாதது பேர்சே/மக்கள் கூட்டணியின் 8 கோரிக்கைகளில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதுதான் பெர்சே@ ப.ராக்யாட்டின் நியாயமான தேர்தலா? அதுமட்டுமல்லாமல் பெர்சே = மக்கள் கூட்டணி தொடர்ந்து ஹிண்ட்ராப்பின் 18 அம்ச கோரிக்கைகளை புறக்கணித்து வருவது எந்த வகையில் நியாயமாகும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் “மலேசிய இந்தியர்கள் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழி” எனும் அவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 15/38 எச்ஆர்பி அரசியல் பலத்திட்டத்தைப் பற்றி கருத்துரைத்தார். ஆளும் அரசாங்கத்தை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எப்படியாவது வீழ்த்தியாகவேண்டும் என்றவுடன், எதிர்பாரா வகையில் வந்திருந்த ஆதரவாளர்கள் பலத்த கரகோஷத்துடன் கைதட்டியது இதுவே முதல் முறையாகும்.

குளுவாங்கிலுள்ள அனைத்து எச்ஆர்பி மற்றும் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குறைந்தது தலா ஒருவர் பத்து பேரை DSC_0064புத்ரி வங்சா மற்றும் திராம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தெப்ராவ் நாடாளுமன்ற தொகுதியிலும் வாக்காளர்களாக பதிவு செய்தால் ஜொகூர் மாநிலத்தில் குறைந்தது இரண்டு இந்திய பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளையும் ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் உருவாக்க முடியும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அந்நிகழ்வில் ஜொகூர் மாநில எச்ஆர்பி தலைவர் வை.மோகன் உரையாற்றுகையில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குத் தொடர்பில் எதிர்வரும் 14/8/11ஆம் தேதி கிள்ளான், ஹோக்கியன் மண்டபத்தில் லண்டன் வழக்கறிஞர் இம்ரான் கான் விளக்கமளிப்பார் என்றும் அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வந்திருந்தவர்கள் 14/8/2011ஆம் நாளன்று பேருந்து சேவைகளை வழங்கவும் முன்வந்து தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி பி.உதயகுமாரின் 45 நிமிட படவிளக்கத்துடன் கூடிய உரையை மயான அமைதியுடன் கூட்டம் செவிசாய்த்தது.

Comments are closed.

No results
HINDRAF De Facto Leader and Founder (Speech PART 1)
Donate Us


Human Rights Party Malaysia logo HRP Project 15/38
Human Rights Party Malaysia
Announcements
Human Rights Party Malaysia logo
HRP Slideshow
Featured Articles
Our Archives