YTL நில மேம்பாட்டாளர் தொடுத்த வழக்கை கம்போங் ரயில்வே செந்தூல் இந்திய குடியிருப்பாளர்கள் சந்தித்தனர்.
கோலாலம்பூர்: செந்தூல், கம்போங் ரயில்வே குடியிருப்பாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் மீது மேம்பாட்டு நிறுவனமான (YTL சார்ந்த) செந்தூல் ராயா சென்.பெர் கொண்டு வந்துள்ள வழக்கை சந்திக்க அக்குடியிருப்பாளர்கள் தயாராகியுள்ளனர்.
இக்கிராம குடியிருப்பாளர்களின் மீது வழக்கு தொடுத்திருக்கும் செந்தூல் ராயா மேம்பாட்டாளரிடம் எப்படி கேதிஎம்பிக்குச் சொந்தமான இக்கிராம நிலம் எந்த அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு கை மாறியது என்று அக்குயிருப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் இன்று 30.1.2012இல் செவிமடுக்கப்படுப்பட்ட இவ்வழக்கு எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் கூடுதலான குடியிருப்பாளர்களின் பெயர்கள் இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் இஎன்று நம்பப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று, செந்தூல் ராயா நிறுவனம் இக்கிராமத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த இந்தியக் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவுக் கோரி இவர்களின் மீது வழக்கு தொடுத்தது.
இந்நிறுவனத்தின் சார்பில் பி.தங்கராஜ் நீதிமன்றத்தில் ஆஜரான வேளையில், இந்நிலம் சட்டப்படி அவர்களுடையது என்றும் இக்குடியிருப்பாளர்கள் நில உரிமையாளரின் அனுமதியின்றி அத்துமீறி இந்நிலத்தில் குடியிருப்பதாக அவர் மேலும் வாதிட்டார்.
இருப்பினும், எதிர் வாதம் புரிந்த இக்கிராம குடியிருப்பாளர்கள், 120 ஆண்டுகாலங்களாக கேதிஎம்பி தானா மெலாயு ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே தாங்கள் குடியிருந்ததாகவும் வாதிட்டனர். இவ்வழக்கின் மூத்த பிரதிவாதிகளில் ஒருவரான சுப்ரமணியம் த/பெ முருகன் (76) கூறுகையில் இவரது தந்தை மலாயான் ரயில்வேயில் 1943லிருந்து பணி புரிந்து வந்ததாக குறிப்பிட்டார். ![]()
இந்தக் குடியிருப்பு ஆரம்பக் காலத்தில் வெறும் ஈயக் குட்டையாகும். கேதிஎம்பி 1885இல் தொடங்கப்பட்டது மட்டுமின்றி செந்தூல் ரயில்வே வோர்க்ஷோப் மலேசியாவில் கேதிஎம்பியின் மிக பழைமைவாய்ந்த வசதிகளில் ஒன்றாகும் என்றார் அவர்.
அதுமட்டுமின்றி இக்குடியிருப்பாளர்களை “சட்டவிரோத குடியேறிகள்” என்று அழைப்பது சரியல்ல என்றும் மாறாக சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள் அல்லது ரயில்வே ஊழியர்களின் நான்காவது சந்ததியினர் என்பதால் நிலத்தின் சரிசமமான உரிமையாளர்கள் என்று குறிப்பிடுவதே தக்கதாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“கேதிஎம்பியின் அனுமதியுடன் நாங்கள் எங்கள் வீடுகளை நிறுவினோம்” என்றார் சுப்ரமணியம். மேலும் கூறுகையில் கம்போங் ரயில்வேயில் தற்பொழுது (4) ஆலயங்கள், மளிகைக் கடைகள், லாரி கிடங்குகள், உணவகங்கள் மற்றும் இதர வசதிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் புகார்
தனது வழக்கு மனுவில், சுப்ரமணியம் கேள்வியெழுப்புகையில் கேதிஎம்பியிடமிருந்து செந்தூல் ராயாவிற்கு நிலம் கைமாறியதன் அடிப்படையை கேள்வியெழுப்பினார். மேலும் இதில் ஊழல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
“இதில் வினோதம் என்னவென்றால் செந்தூல் ராயா கேதிஎம்பியின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமல்ல. மேலும் இதுவொரு ரிம 2 வெள்ளி மட்டுமே மதிப்புள்ள தனியார் நிறுவனமென்றும் தற்பொழுது திடீரென்று இந்நிலத்திற்கு உரிமையாளர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
இந்நிலம் கை மாற்றப்பட்டதில் ஏதோ சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இந்நிலம் விற்கப்பட்டதில் ஊழல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாகவும் சுப்ரமணியம் கூறினார். ஆகவே இக்கிராம குடியிருப்பாளர்கள் லஞ்ச துடைத்தொழிப்பு ஆணையத்திடம் கூடிய விரைவில் புகார் செய்ய விருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் இக்குடியிருப்பாளர்களை இந்நிலத்திற்கான சட்டரீதியான உரிமையாளர்கள் என்று அறிவித்து கம்போங் ரயில்வேயை ஒரு இந்திய ரயில்வே புராதன கிராமமாகவும் அக்கிராமத்தின் பெயரை தாமான் கம்போங் ரயில்வே செந்தூல் இந்தியன் செட்டில்மென்ட் என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரமணியம் முன்வைத்தார்.
அதுமட்டுமின்றி இக்கிராம குடியிருப்பாளர்களுக்கு நிலத்திற்கான நிரந்தர நிலப்பட்டா வழங்கியோ அல்லது ரிம 2 லட்சம் பெருமானமுள்ள 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட தரை வீடுகளை எந்தவொரு கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சுப்ரமணியம் உட்பட 31 கிராம குடியிருப்பாளர்களை பிரதிநிதித்து ஆஜராகிய வழக்கறிஞரும் ஹிண்ட்ராப் மூத்த தலைவருமான பி.உதயகுமார் கூறுகையில், பிரதிவாதிகள் நில அலுவலகத்தில் குறிப்பு சேகரிக்கச் சென்றபொழுது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதைக் கேட்கையில் மிகவும் வினோதமாக உள்ளது என்று குறிப்பிட்டார். பல முறை முயிற்சித்தும் அதற்கான தேடுதலை மேற்கொள்ள தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதற்காக ஒரு தனியார் நில அலுவலகப் பணியாளரிம் இவ்வேலையை ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எப்படி கேதிஎம்பி நிலம் செந்தூல் ராயாவிடம் விற்கப்பட்டது? என்பது மர்மமாகவே உள்ளது. எந்த தொகைக்கு அது விற்கப்பட்டது? அது சந்தை விலைக்கு விற்கப்பட்டதா? காரணம் செந்தூல் ராயா வெறும் ரிம 2 வெள்ளி மட்டுமேயான நிறுவனம் என்று பி.உதயகுமார் கேள்வியெழுப்பினார்.
-ஃப்ரீ மலேசியா டூடே
(31/1/2012)


