வறுமையில் சிக்கிய இந்தியக் குடும்பங்களின் தற்கொலைகள். பிரதமருக்கு ஹிண்ட்ராப் அதிரடிக் கடிதம்.

 

Copy of 6b 1

 

உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களைக் கொண்டுள்ள மலேசியாவில் நிகழும் சம்பவங்கள் உண்மையில் இங்கு நிகழ்கின்றனவா அல்லது வறுமைப் பிடியில் சிக்குண்ட வங்காளதேசத்தின் உட்புறப்பகுதியில் நிகழ்ந்தனவா என்று திகைக்க வைக்கும் அளவிற்கு சிறுபான்மை மலேசிய ஏழை இந்தியர்களின் நிலை இன்றுள்ளது.

இன்று காலை தொலைபேசியில் ஹிண்ட்ராப் இளைஞர் பகுதித் தலைவர் எஸ்.தியாகராஜனை அழைத்துப் பேசிய திருமதி.சரஸ்வதி கூறுகையில், கே.லெட்சுமணன் என்ற தோட்டத் தொழிலாளர் ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக ரவூப் பகுதி போலீசார் மரணம் விளைவித்ததாக தெரிவித்தார். (கோஸ்மோ 12.3.2012 பக்கம் 12). எப்பொழுதும் போல இந்த அரசாங்கம் இறந்தவரின் விதவை மற்றும் ஆறு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் நிதியுதவி, சமூகநல உதவி மட்டுமின்றி கல்விக்கான உதவிகளை செய்துத் தர மறுத்துவிட்டது என்பதை சுட்டிக் காட்டி பிரதமர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி.உதயகுமார் 12.3.2012 தேதியிட்ட கடிதம் எழுதியனுப்பினார்.

கணவர் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத அவரின் மனைவி ஆர்.லெட்சுமி வேறு வழியின்றி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவர்களது ஆறு பிள்ளைகளும் லெட்சுமணனின் தங்கையான கே.சரஸ்வதியின் பராமரிப்பில் இருக்கின்றனர். தனது 5 சொந்தக் குழந்தைகளை பராமரித்து வந்த சரஸ்வதி தனது அண்ணனின் 6 குழந்தைகளையும் தற்பொழுது பராமரித்து வரும் நிலைக்குள்ளாகியிருக்கிறார். சமையல்காரராக வேலை செய்து வரும் இவர் மாதத்திற்கு ரிம.900.00 மட்டுமே ஊதியமாக பெறுகிறார். வாடகை வண்டி ஓட்டுனராக வேலை செய்து வந்த சரஸ்வதியின் கணவர் எம்.வேலு (40)வின் (வாடகை வண்டிக் கட்டணம் செலுத்தப்பட இயலாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது).

குறிப்பு: மலாய் முஸ்லிமினரின் தற்கொலைச் சம்பவ எண்ணிக்கையைக் காட்டிலும் இந்நாட்டில் 8% மட்டுமே மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஏழை இந்தியர்களின் தற்கொலைச் சம்பவங்கள் 600% கூடுதலாக உள்ளது.

இந்நிலையில் அவருக்கு மீளா துயரம் சேரும் வகையில், சரஸ்வதியின் மற்றுமொரு அண்ணனான கே.சந்திரன் வேலை செய்யும் இடத்தில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்த வேளையில் அவரது 5 பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பும் சரஸ்வதியையே வந்துச் சேர்ந்தது.

தற்பொழுது சரஸ்வதியின் பராமரிப்பில் 16 பிள்ளைகளும் பருவக் குழந்தைகளும் உள்ளனர். இந்நாட்டில் குறைந்தபட்சம் ஐவர் வாழும் ஒரு குடும்பத்தின் வறுமைக் கோடு ரிம.786.00 ஆக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில், இவர்கள் அனைவருக்கும் சமூக நல இலாகா ரிம400.00 மட்டுமே வழங்கி வருகிறது.

துயருக்கு துயர் சேர்க்கும் வகையில் இன்றைய மலேசிய நண்பன் நாளிதழின் முதல் பக்கத்தில் பாசிர் கூடாங்கைச் சேர்ந்த கே.குமுதம் (38) என்ற தனித்து வாழும் தாயார் தனது நான்கு குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவுக் கூட கொடுக்க முடியாமல் வேறு வழியின்றி தற்கொலைதான் முடிவு என்று கண்கலங்கி நிற்கும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏழ்மை நிலையில் வாடும் தனது அண்டை அயலார் மற்றும் உறவினர்களின் பரிவில் அவர் தற்பொழுது வாழ்ந்து வருகிறார். ஆனால் எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்கும் என்றும் உதயகுமார் தனது கடிதத்தில் கேள்வியெழுப்பினார்.

கண்டிப்பாக இது ஒரே மலேசியாவாகாது. ஒரே மலேசியா கொள்கையிலிருந்து இரு தலைமுறைகள் பின்தள்ளப்பட்ட சமூகமாகவே இந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலமற்ற சிறுபான்மை ஏழை இந்தியர்கள் வாடுகின்றனர் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, கீழ்கண்ட பரிந்துரைகளை பிரதமர் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றக் கோரிக்கைகளை பி.உதயகுமார் முன்வைத்தார்:-

1. இவ்விரண்டு குடும்பங்களுக்கு மட்டுமின்றி ஏழ்மையில் சிக்கித் தவிப்பதாக கணிக்கப்பட்ட 500,000 இதர ஏழை இந்தியர்களுக்கு அர்த்தமுள்ளதாகவும் நிரந்தரத் தீர்வாகவும் பெல்டா, பெல்க்ரா, ரிஸ்டா, ஃபாமா, மார்டி, அக்ரோபோலிதான், காடா, மாடா, கெஜோரா, கெதெஙா போன்ற (10) ஏக்கர் நில உரிமையாளர் திட்டத்தில் 1.5 மில்லியன் மலாய் முஸ்லிமின ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலம் போன்று வழங்கப்பட வேண்டும்.

2. தற்பொழுது சரஸ்வதியின் பராமரிப்பில் இருக்கும் ஒவ்வொரு குழுந்தைக்கும் வீதம் ரிம100.00 பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்கு ரிம.200.00 வழங்குவதோடு மட்டுமின்றி சரஸ்வதி தற்பொழுது பராமரித்து வரும் மூன்று குடும்பங்களுக்கென அருகருகே மூன்று இலவச பிபிஆர் அடுக்குமாடி வீடுகளை அங்கீகரிக்க வேண்டும் .

3. இதே போன்று கே.குமுதத்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

4. இதே நிலைமையில் நாளுக்கு நாள் வேதனையில் காலந்தள்ளி வரும் கணிக்கப்பட்ட 500,000 ஏழை இந்தியர்களுக்கும் இதுபோன்ற நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

5. 1957 சுதந்திரம் தொடங்கி ஏழை மலாய் முஸ்லிமினருக்காக பெல்டா போன்ற 10 ஏக்கர் நில உரிமையாளர் திட்டத்தில் நிலம் வழங்கி ஒரே மலேசியாவின் உண்மையான கொள்கை செயல்படுத்தியதுபோல், ஏழை இந்தியர்களுக்காக ஒரே மலேசியா அரசாங்கம் பின்னோக்கிச் சென்று மேற்குறிப்பிடப்பட்ட நிலக் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஏழை இந்தியர்கள் முன்னோக்கிச் செல்ல முடியும் என்றும் பிரதமரின் ஒரே மலேசியா கொள்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்றும் பி.உதயகுமார் தனது கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.

 

 

6b 3 6b 1 6b 2

Handicapped, unemployed & separated Indian poor man’s (33) way out of misery is to commit suicide in tragic circumstances: UMNO racist agenda.

New Scan-20120119142734-00001

 

Note: Both his index fingers appear handicapped.

If and only if this poor Indian was granted, the estimated 1.5 million ten (10) acre land ownership scheme (914,346 Malay muslim poor gets Risda l0 acre land ownership in 1 Malay-sia), he and his wife would not have separated and there would be no need for him to commit suicide. Why should somebody commit suicide if he is not suffering from misery arising from UMNO institutional poverty?

 

and his 4 kids will be the next generation Indian poor under racist UMNO social engineering.

(see Sinarharian 19/1/2012 at page 48)

 

New Scan-20120119142734-00001